எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாம் ராஜா ராணி இல்லை, நாட்டின் குடிமக்கள்தான் ராஜா, ராணிகள் என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஆங்கிலேய ஆர்டர்லி முறை இன்னும் தொடர்வது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்பப் பெற வேண்டும். தனியார் வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. காவல் துறை அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு நிற கூலிங் பிலிம் ஒட்டக் கூடாது’ என்று ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், 19 ஆர்டர்லிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மாநாட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா?" எனக் கேள்வி எழுப்பினார்.
"நாம் ராஜா ராணி இல்லை, நாட்டின் குடிமக்கள்தான் ராஜா, ராணிகள். நாம் அனைவரும் மக்கள் சேவகர்கள். இந்த விவகாரத்தில் முதன்மைச் செயலாளர் முறையாக செயல்பட வேண்டும். வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது, அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் காவல்துறைக்கு ஒழுக்கம் மிக முக்கியமானது. 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்றும் வேதனை தெரிவித்தார். அரசுக் குடியிருப்புகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த எம்.பி.,க்களை காலி செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் வேளையில், இங்கு சீருடை அணிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக காவலர் குடியிருப்பில் தங்கியிருப்பதை தடுக்க முடியவில்லை.
ஆர்டர்லிகளாக உள்ளவர்கள் இது குறித்து எதுவும் பேசமாட்டார்கள். ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை. ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மை செயலாளாரின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும்.
ஆர்டர்லிகளை திரும்ப ஒப்படைப்பதில் உயர் அதிகாரிகளுக்கு சிரமம் இருக்கும்தான், அதேநேரம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். எனவே அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "காவல்துறையின் பணி பாராட்டுக்குரியது. மேலும் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது" என்றார்.
இந்த வழக்கில் காவல்துறை டிஜிபியை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி, ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி
31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
31 Oct 2025காந்தி நகர் : சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே
31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.


