முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி பலி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      இந்தியா
Kashmir 2022-07-09

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி உயிரிழந்தார். பந்திப்போராவில் உள்ள சோத்னாரா சம்பல் பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். துப்பாக்கி சூடு சம்பவத்தில் பீகார் தொழிலாளி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த நிலையில் பலியானார்.

பீகார் மாநிலம் மாதே பூரா பகுதியை சேர்ந்தவர் முகமது அம்ரேஸ். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் வசித்து வந்தார். இவர் புலம் பெயர்ந்த தொழிலாளி ஆவார். பந்திப்போராவில் உள்ள சோத்னாரா சம்பல் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு மீண்டும் கைவரிசை காட்டி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பீகார் தொழிலாளி முகமது அம்ரேஸ் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து