முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்வையில்லாதவர்கள் இனி பார்வை பெறமுடியும்: பன்றியின் தோலில் இருந்து கருவிழியை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை !

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      இந்தியா
Eye 2022-08-13

பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை மனிதர்களுக்கு பொருத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம் இனி பார்வையில்லாதவர்கள் பார்வை பெற முடியும்.

கருவிழிப் படலம் அல்லது விழி வெண்படலம் (கார்னியா) என்பது கண்ணில் ஒளி ஊடுருவக்கூடிய வட்டவடிவ முன்பகுதியாகும். இதில் ஏற்படும் பாதிப்பால் கன்பார்வை பறிபோகும் நிலை உள்ளது. இந்த நிலையில், பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இதன் மூலம் பார்வை குறைபாடு பிரச்சனை உள்ளவர்கள் பார்வை திறன் பெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். இந்தியா மற்றும் ஈரானைச் சேர்ந்த சிலர் பார்வை குறைபாடு அவதிப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு இந்த உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்து பார்வை பெறச் செய்தனர் மருத்துவர் நிபுணர்கள். இதன் மூலம் கண் பார்வை இல்லாதவர்கள் கூட பார்வையை பெற முடியும் என கூறப்படுகிறது. 

பொதுவாக இறந்தவர்கள் உடலில் இருந்து கண் தானம் செய்த கண்களை பெற்று பார்வை இல்லாதவர்களுக்கு பொருத்துவது வழக்கம்.இந்த நிலையில் ஆய்வகங்களில் செயற்கையான முறையில் கண் கருவிழியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி அதனை மனிதர்களுக்கு பொருத்தி வெற்றியும் கண்டுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ நிபுணர்கள் இணைந்து இந்த புதிய சாதனையை செய்துகாட்டியுள்ளனர்.

ஆய்வகத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இந்த கருவிழி 2 வருடங்கள் வரை பத்திரமாக பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் பார்வையில்லாத பலருக்கு பார்வை கிடைக்க வழி செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து