முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பதவி விலகல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Kodiyeri-Balakrishnan 2022-

Source: provided

புதுடெல்லி : கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரான கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நல குறைவால் பதவி விலகியுள்ளார். 

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்து வருபவர் கோடியேரி பாலகிருஷ்ணன். இவர் உடல்நிலையை காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்து உள்ளார். கட்சியின் பழம்பெரும் தலைவரான அவர், தனது முடிவை பற்றி கட்சி தலைமைக்கு  தெரிவித்து உள்ளார். 

கடந்த 2020-ம் ஆண்டு சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்த பதவியில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு பதிலாக ஏ. விஜயராகவன் என்பவர் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பினை வகித்து வந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து