முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரமை வியக்க கேரள ரசிகர்கள்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      சினிமா
Vikram 2022-08-29

Source: provided

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை, தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர், கேரளாவிலுள்ள கொச்சிக்கு பயணம் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து