முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பிரான்ஸ் அரசு பிரத்யேக திட்டம்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      உலகம்
French- 2022 09 22

நாடு முழுவதும் சைக்கிள் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 1970 கோடி மதிப்பில் பிரத்யேக திட்டங்களை பிரான்ஸ் செயல்படுத்த இருக்கிறது. 

சுற்றுச்சூழல் மேம்பாடு, எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை கருதி சைக்கிள்களை பயன்படுத்துவதை பிரான்ஸ் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு சைக்கிளை பயன்படுத்துவோருக்காக பிரத்யேக திட்டம் ஒன்றை பிரான்ஸ் அரசு தயாரித்துள்ளது. முதல்கட்டமாக தலைநகர் பாரிசில் செயல்படுத்தவுள்ள சைக்கிள் பயன்பாடு குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள், சைக்கிளிலேயே நிகழ்ச்சிக்கு வந்தது அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்வில் பேசிய பிரதமர் எலிசபெத் போர்ன், தொடக்க பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் பழக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கிராமப்புறங்களிலும் சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் தனி வழித்தடம் அமைப்பு, சைக்கிள் வாங்க நிதி உதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு அடுத்த ஆண்டு 1970 கோடி ரூபாய் செலவிடப்பட இருப்பதாக எலிசபெத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து