முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி. வேலுமணியின் மனுக்கள் மீது அக். 12-ல் இறுதி விசாரணை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      அரசியல்
chennai-high-court 2022-08-29

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர் 2018-ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு இந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது குறித்த விவரங்களை விளக்கினர். 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து