முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்தது தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தகவல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
JP-Nadda 2022-09-22

Source: provided

மதுரை: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் இருநாள்கள் பயணமாக அவர் தமிழகம் வந்துள்ளார். நேற்று பிற்பகல் அவர் விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார்.  மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஜெ.பி.நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  மதுரையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் அவர், காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்..  பின்னர் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  ஜெ.பி.நட்டா வருகையையொட்டி பாஜகவினர் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிவித்தார். 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். விரைவில் கட்டுமானம் நடைபெற்று அதை மோடி திறந்து வைப்பார் என ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து