எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்களுக்கு 25-ம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 6-ம் தேதி (நேற்று) முதல் பார்க்கலாம். மேலும் பாடத்திட்டம் சார்ந்து கருத்துகளை https://tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப்படிவம் வாயிலாக, சுய விவரங்களுடன் வருகிற 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


