முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 26-ம் தேதி அமைச்சரவை கூட்டம் : முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் கூட உள்ளது. இந்நிலையில் வரும் 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவான ஆலோசிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், புதிய தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களையும் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் வழங்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

ஏற்கனவே ஆகஸ்ட் மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இம்முறை அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் வரும் 26-ம் தேதி அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளதால் மேற்கண்ட அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து