முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்ட வன்முறை: ஈரான்தூதரிடம் ஜெர்மன் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      உலகம்
German 2022-09-27

Source: provided

பெர்லின்: ஈரானில் காவலா்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனியின் மரணத்தைத் தொடா்ந்து, அந்த நாட்டின் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை எதிா்த்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க போலீசார் வன்முறையில் ஈடுபடுவது குறித்து தங்கள் நாட்டுக்கான ஈரான் தூதா் மஹ்மூத் பராசாண்டேவை நேரில் அழைத்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.

அமைதியான போராட்டங்களை அனுமதிக்குமாறும் இனியும் போராட்டக்காரா்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க வேண்டாம் எனவும் மஹ்மூதிடம் வலியுறுத்தியதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.  மாஷா அமீனி மரணத்தைத் தொடா்ந்து நடைபெற்ற வரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவரை 41 போ் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஈரான் கலாசார காவலா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கனடா அரசு பொருளாரத் தடைகளை அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து