முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா, அறநிலையத்துறை சார்பில் ரூ. 6.57 கோடியில் புதிய கட்டிடங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
CM 2022-09-27

Source: provided

சென்னை: சுற்றுலாத் துறை சார்பில் ரூ. 6.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா அலுவலகக் கட்டிடம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தங்கும் விடுதி மற்றும் கூட்டரங்கம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு ஓட்டலில் 4 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்டரங்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா அலுவலகக் கட்டடம் மற்றும் மதுரை, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தர்காவில் ஒரு கோடியே 80 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆர். வைத்தியநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து