முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      உலகம்
JinPing 2022-09-27

Source: provided

பெய்ஜிங்: வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உலகமெங்கும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள், அதிபர் பதவியில் இருந்து ஜின்பிங்கை நீக்கியதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வதந்தி பரவியதாக, சீனாவை சேர்ந்த ஜெனிபர் ஜெங்க் என்ற பெண் மனித உரிமை ஆர்வலர் வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தார். மேலும் சீனாவின் புதிய அதிபராக ராணுவ தளபதி லி கியாமிங் பதவி ஏற்றுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இந்த விவகாரத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியோ, அரசோ எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் பொதுவெளியில் தோன்றினார். சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார். கடந்த 16-ம் தேதிக்கு பிறகு முதன் முறையாக அதிபர் ஜின்பிங் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து