எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சினும், டோனியும் டென்னிஸ் கோர்ட்டில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் விளம்பர பட படப்பிடிப்புக்காக இணைந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் கேஷுவல் டி-ஷர்ட் அணிந்து கொண்டு அதில் காட்சி அளிக்கின்றனர். அவர்கள் இருவரும் இணைந்துள்ள இந்தப் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இருவரும் அந்த விளம்பர படக்குழுவினர் சொன்னதை கூர்ந்து கவனித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆத்மார்த்தமான அன்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே டென்னிஸ் விளையாட்டை விரும்புபவர்களும் கூட. அண்மையில் நடந்த அமெரிக்க ஓபன் தொடரின் போட்டியை டோனி நேரில் கண்டு களித்தார். அது மிகவும் அரிது. மறுபக்கம் சச்சினோ விம்பிள்டன் உட்பட இங்கிலாந்தில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களை மிஸ் செய்யவே மாட்டார்.
_____________
சிறந்த கோல்கீப்பர்களாக 2 - வது
முறை தேர்வான ஸ்ரீஜேஷ், சவிதா
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த கோல்கீப்பர்களாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மகளிர் ஹாக்கி அணியின் சவிதா பூனியா ஆகியோர் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீஜேஷ் 39.9 புள்ளிகள் பெற்றார். பெல்ஜியத்தின் லோயிக்வான் டோரன் 26.3 புள்ளிகளையும், நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் 23.2 புள்ளிகளையும் பெற்றனர். இந்த தேர்வுக்கான வாக்கெடுப்பு ஹாக்கி வல்லுநர்கள் (40 சதவீதம்), அணிகள் (20 சதவீதம்), ரசிகர்கள் (20 சதவீதம்) மற்றும் ஊடகங்கள் (20 சதவீதம்) மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்டன.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கு ஸ்ரீஜேஷ் தொடர்ச்சியாக 2-வது முறையாக தேர்வாகி உள்ளார். மகளிர் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக இந்திய அணியின் சவிதா பூனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான வாக்கெடுப்பில் சவிதா 37.6 புள்ளிகள் பெற்றார். அர்ஜென்டினாவின் பெலன் சுசி 26.4 புள்ளிகளையும், ஆஸ்திரேலியாவின் ஜோஸ்லின் பார்டம் 16 புள்ளிகளையும் பெற்றனர்.
____________
லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி:
இந்திய கேப்பிடல்ஸ் அணி சாம்பியன்
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்தது. 4 அணிகள் விளையாடிய இத்தொடரின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்திய கேப்பிடல்ஸ்-பில்வாரா கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்தது. ரோஸ் டெய்லர் 82 ரன்னும், மிட்செல் ஜான்சன் 62 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் பில்வாரா கிங்ஸ் அணி 18.2 ஓவரில் 107 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் காம்பீர் தலைமையிலான இந்திய கேப்பிடல்ஸ் அணி 104 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
____________
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து
போட்டி இன்று தொடங்குகிறது
9-வது இந்தியன் சூப்பர் லீக் (2022-23 சீசன்) கால்பந்து இன்று தொடங்குகிறது. சென்னையின் எப்.சி., ஏ.டி.கே. மோகன் பகான், பெங்களூரு எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா, ஈஸ்ட் பெங்கால் ஆகிய 11 அணிகள் விளையாடுகின்றன.கொச்சியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மொத்தம் 110 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும். புள்ளி பட்டியலில் 3 முதல் 6-வது இடம் வரை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இதிலிருந்து மேலும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கும் இப்போட்டி அட்டவணையில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போட்டியை ரசிகர்கள் நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
____________
பாலியல் வன்கொடுமை புகார்:
நேபாள கிரிக்கெட் வீரர் கைது
நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே நேற்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சந்தீப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து சந்தீப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
_______________
யு-17 உலகக் கோப்பை கால்பந்து:
இந்திய மகளிர் அணி அறிவிப்பு
17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 11-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்குகிறது. இந்திய மகளிர் அணி தனதுமுதல் லீக் ஆட்டத்தில் 11-ம் தேதி அமெரிக்காவுடன் மோதுகிறது. தொடர்ந்து 14-ம் தேதி மொராக்கோவுடனும், 17-ம் தேதி பிரேசிலுடனும் இந்திய அணி மோத உள்ளது.இந்நிலையில் இந்தத் தொடருக்கான 21 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பயிற்சியாளர் தாமஸ்டென்னர்பி அறிவித்தார்.
அணி விவரம்: கோல்கீப்பர்கள்: மோனாலிஷா தேவி மொய்ராங்தெம், மெலடி சானு கெய்ஷாம், அஞ்சலி முண்டா. டிபன்டர்கள்: அஸ்தம் ஓரான், காஜல், நகேதா, பூர்ணிமா குமாரி, வர்ஷிகா, ஷில்கி தேவி ஹேமம். நடுகளம்: பாபினா தேவி லிஷாம், நிது லிண்டா, ஷைல்ஜா, சுபாங்கி சிங். முன்களம்: அனிதா குமாரி, லிண்டாகோம் செர்டோ, நேஹா, ரெஜியா தேவி லைஷ்ராம், ஷெலியா தேவி லோக்டோங்பாம், கஜோல் ஹூபர்ட் டிசோசா, லாவண்யா உபாத்யாய், சுதா அங்கிதா திர்கி.
_______________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்
08 Jul 2025சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
08 Jul 2025சென்னை : ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
-
அ.தி.மு.க.,வை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது: இ.பி.எஸ்.
08 Jul 2025கோவை : ''அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்ற நம்பிக்கையை நாம் பெற்று இருக்கிறோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.