முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி : நவம்பரில் தீவிரமடையுமா?

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2022      இந்தியா
Corona 2022-10-31

Source: provided

புனே : இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 8 மாநிலங்களில், உருமாறிய கொரோனா வைரஸ் எக்ஸ்பிபி வகை பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றான XBB என்ற தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. GISAID (Global Initiative on Sharing Avian Influenza Data) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாக இந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

வைரஸின் மாற்றங்களைக் கண்காணித்து வரும் GISAID என்ற அமைப்பின் ஆய்வில் தமிழகத்தில் 175 பேரும், மேற்கு வங்கத்தில் 103 பேரும் என நாடு முழுவதும் 380 பேர் XBB வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, கர்நாடகா, குஜராத் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. XBB வகை கொரோனா மாறுபாடு முதன்முதலில் சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. இதுவரை 17 நாடுகளில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, " வைரஸ்களின் உருமாற்றம் என்பது பொதுவானது தான். தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் தற்போது கண்டறியப்படவில்லை. கொரோனா பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து வைரஸ்களின் உருமாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா உறுதி செய்யப்படும் மொத்த நபர்களில் 20 சதவீதம் பேர் எக்ஸ்பிபி வகை வைரஸால் பாதிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிபி அதிகமாக பரவி வருவதால் ஏற்கனவே பரவி வந்த பிஏ.2.75 வகை வைரஸின் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. தற்போது மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் பரவி வரும் கொரோனா வைரஸில் பெரும்பாலும் எக்ஸ்பிபி ஆகவே உள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, கனடா மற்றும் பிரிட்டனிலும் எக்ஸ்பிபி வகை வைரஸ் பரவி வருகிறது.  இந்த எக்ஸ்பிபி வைரஸிலும் பல வகையான மாறுபாடுகள் காணப்படுவதாகவும், இதில் ஒன்று, இரண்டு, மூன்று வகைகள் தற்போது சிங்கப்பூர், வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க் நாடுகளில் பரவியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சிங்கப்பூர் அரசு, வரும் நவம்பரில் எக்ஸ்பிபி வைரஸ் பரவுவது அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து