முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தல் : ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்

புதன்கிழமை, 9 நவம்பர் 2022      உலகம்
US-election 2022-11-09

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் நேற்று நடந்த இடைக்கால தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அமெரிக்க பாராளுமன்றம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இந்த இரு அவைகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக் காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது. 

பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் பெரும்பாலான இடங்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் நிலையில், 30 இடங்களில் மட்டுமே கடும் போட்டி நிலவுகிறது. பென்சில்வேனியா, கலிபோர்னியா, ஓஹியோ மற்றும் வட கரோலினா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். இதற்கான பிரச்சாரத்தில் அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டார். மேலும், இந்தத் தேர்தலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்களும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில், இடைக்கால தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்கு மையங்களில் ஆர்வமுடன் வாக்களித்தனர். இடைக்கால தேர்தல் முடிவுகள் என்பது அதிபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதற்காக மக்கள் தரும் இடைக்கால தீர்ப்பாக இருக்கும். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து