முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரச பொறுப்புகளை துறந்தார் நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ்: மாற்று மருத்துவ ஆய்வில் ஈடுபட போவதாக அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2022      உலகம்
Martha-Louise-2022-11-11

நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாகவும், மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் தான் ஈடுபடப் போவதாகவும் அவர்  அறிவித்துள்ளார். 

நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஹாலிவுட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவித்துள்ளார். கேன்சர் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்யவும், மாற்று மருத்துவத்தில் ஈடுபட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இளவரசி மார்த்தா லூயிஸ்-ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் ஜோடி மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இளவரசி மார்த்தா லூயிஸ் கூறியிருப்பதாவது, நோயாளிகளுக்கு வழக்கமான மருத்துவத்துடன், மாற்று மருத்துவ முறைகள் (யோகா, தியானம், அக்குபஞ்சர்) மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

இந்த விஷயத்தை நார்வே அரச குடும்பமும் உறுதி செய்துள்ளது. 51 வயதான நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், தனது இளவரசி பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வார், ஆனால் எந்த வணிக நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து