முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்வு : ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2022      உலகம்
UN 2022-11-15

Source: provided

நியூயார்க் : உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2080-ம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளது. இன்று(நேற்று) உலகின் எதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கும் குழந்தை ஒன்று உலகின் மக்கள்தொகையை 801 கோடியாக அதிகரிக்க செய்திருக்கலாம். 1950-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 200 கோடியாக இருந்தது. அதனை ஒப்பிடுகையில் தற்போது உலக மக்கள்தொகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

ஆனால், சமீப ஆண்டுகளாக கருவுறுதலில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக 2050-ம் ஆண்டு மக்கள் தொகை 0.5 சதவீதமாக வீழ்ச்சியடையக் கூடும். இருப்பினும் 2050-ம் ஆண்டு பூமியின் மக்கள் தொகை 900 கோடியாகவும் 2080-ம் ஆண்டு மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும். மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகளில் இருந்துதான் வரப்போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. எனினும் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா சில ஆண்டுகளில் மிஞ்சிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து