முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்கள் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Senthil-Balaji- 2022--10--25

Source: provided

சென்னை : தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31-ம் வரை நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இன்று (28-ம் தேதி) முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மின்வாரிய அலுவலகங்களில் ஆதாரை இணைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் மூலம் ஆதாரை இணைக்க 34 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது. இதற்கிடையே மின் இணைப்புடன் ஆதாரை ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து