முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நீக்குவதாக ஆப்பிள் நிறுவனம் மிரட்டல்? எலான் மஸ்க் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      உலகம்
Elon-Musk 2022-10-28

தனது ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நீக்குவோம் என்று ஆப்பிள் நிறுவனம் அச்சுறுத்தி வருவதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். 

டுவிட்டர் நிறுவனத்தை தன்வசம் படுத்தியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார்.  இந்நிலையில் ஆப்பிள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் டுவிட்டரை தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க திட்டமிட்டிருப்பதாக டுவிட்டரில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

 

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து டுவிட்டரை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்தி உள்ளதாகவும் ஆனால் அதற்கான காரணத்தை கூறவில்லை என்றும் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் டுவிட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்தி விட்டதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கையில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளதாகவும் அதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கு தவிர வேறு வழியில்லை என்றும் அவர் டுவீட் செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து