எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டவர்கள் குடியேறிய நிலை, சமுதாயக் கூடங்களின் பராமரிப்பு, ஈரோடு மாவட்டம், ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்கிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் தற்போதைய நிலை மற்றும் அக்காலியிடங்களை ஒதுக்கீடு செய்தல், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் ஆகிய நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர், அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி, ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |