முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்: ஜே.பி. நட்டா தலைமையில் நாளை முதல் 2 நாட்கள் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் ஆலோசனை

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      அரசியல்
JP-Natta 2022 12 03

பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராவது பற்றி பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் நாளை 5-ம் தேதி  மற்றும் 6-ம் தேதிகளில் ஆலோசனை நடத்துகின்றனர்.  

2024-ம் ஆண்டு, பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. விரும்புகிறது. இதற்கான செயல்திட்டங்களை பா.ஜ.க. வகுத்து வருகிறது. இதுபோல், அடுத்த ஆண்டு கர்நாடகா, திரிபுரா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அவற்றிலும் வெற்றி பெற பா.ஜ.க. இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேசிய அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாளை 5-ம் தேதி  மற்றும் 6-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்குகிறார். தேசிய நிர்வாகிகள் மட்டுமின்றி, மாநிலங்களின் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் (அமைப்பு) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிகிறது. பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராவது பற்றி இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது நடந்து வரும் கட்சியின் அமைப்பு சார்ந்த பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து