முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவை காய்ச்சல் பதற்றம்: 3 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      உலகம்
Japan-chicken 2021 12-06

ஜப்பானில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக 3 லட்சம் கோழிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக மாகாணம் முழுவதிலும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். 

இதே போல் கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  ஜப்பானில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருவதும் இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து