முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து உலகக் கோப்பை போட்டி: இன்று காலிறுதி முதல் போட்டியில் பிரேசில் - குரோசியா பலப்பரீட்சை 2-வது ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா - நெதர்லாந்து மோதல்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      விளையாட்டு
8-Ram-55

Source: provided

தோஹா: கால்பந்து உலகக் கோப்பை போட்டியின் இன்று காலிறுதி போட்டியின் முதல் சுற்றில் 

பிரேசில் - குரோசியா மோதுகிறது. இன்று இரவு நடக்கும் மற்றொரு போட்டியில் ஆர்ஜென்டீனா - நெதர்லாந்து பலப்பரீட்சை நடத்துகிறது.

8 அணிகள்...

கத்தார் உலகக் கோப்பைப் போட்டி காலிறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது.  பிரேசில், குரோசியா, ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து, போர்ச்சுகல், மொராக்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. 

இன்று முதல் (டிசம்பர் 9) காலிறுதிச் சுற்று தொடங்குகிறது. பிரேசில் - குரோசியா, ஆர்ஜென்டீனா - நெதர்லாந்து ஆகிய அணிகள் இன்றும், அடுத்த நாள் போர்ச்சுகல் - மொராக்கோ, பிரான்ஸ் - இங்கிலாந்து ஆகிய அணிகளும் மோதுகின்றன.  டிசம்பர் 13, 14 தேதிகளில் அரையிறுதிச் சுற்றும் டிசம்பர் 18 அன்று இறுதிச் சுற்றும் நடைபெறவுள்ளன. டிசம்பர் 17 அன்று 3-வது இடத்துக்கான ஆட்டம் நடைபெறுகிறது.

BOX - 1

காலிறுதிச் சுற்று (இந்திய நேரம்)

டிசம்பர் 9

1) பிரேசில் - குரோசியா (இரவு 8.30 மணி).

2) ஆர்ஜென்டீனா - நெதர்லாந்து (நள்ளிரவு 12.30 மணி).

டிசம்பர் 10

1) போர்ச்சுகல் - மொராக்கோ (இரவு 8.30 மணி).

2) பிரான்ஸ் - இங்கிலாந்து (நள்ளிரவு 12.30 மணி).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து