முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுநீர் விமர்சனம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2022      சினிமா
Nedunir-vimarcanam 2022-12-

Source: provided

சிறுவயது ராஜ்கிருஷ், தன் தந்தையை கொலை செய்துவிட்டு தோழி இந்துஜாவுடன் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்.. வழியில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். 8 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிருஷை சந்திக்கும் இந்துஜா, ரவுடி தொழிலை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அதற்காக தாதாவிடம் இருந்து ராஜ்கிருஷ்  விலக முடிவு செய்யும் போது அவரை பழி தீர்க்க காத்திருந்தவர்கள் துரத்துகிறார்கள்.  அவர்களிடம் இருந்து தப்பித்து இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே நெடுநீர் படக்கதை. அறிமுக நாயகன் தனது முதல் படம் போல் இல்லாமல் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அழகாக நடித்து கவர்கிறார். நாயகி இந்துஜா, எந்தவித சினிமாத்தனமும் இன்றி இயல்பாக நடித்திருக்கிறார். அண்ணாச்சியாக வரும் மா.சத்யா நடிப்பு, சண்டைக்காட்சி என அனைத்திலும் பின்னி எடுத்திருக்கிறார். லெனின் சந்திரசேகரனின் ஒளிப்பதிவில் கடலூர் அழகையும், கடலின் அழகையும் ரசிக்க முடிகிறது.  ஹித்தேஷ் முருகவேல் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.  எழுதி இயக்கியிருக்கும் கு.கி.பத்மநாபன், காதல் கடலைப்போன்றது என்பதை நெடுநீராக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், நெடுநீர் அழகு, ஆர்ப்பரிப்பு, அமைதி என கடலின் அத்தனை அம்சங்களையும் கொண்ட எளிமையான படம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து