முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு மத்திய பிரதேசம், பெங்கால், கர்நாடகம் முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      விளையாட்டு
Ranji-Cup 2023 02 03

Source: provided

பெங்களூர் : ரஞ்சி கோப்பைப் போட்டியில் பெங்கால், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

கர்நாடக அணி...

பெங்களூரில் நடைபெற்ற காலிறுதியில் உத்தரகண்ட் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கர்நாடகம் அணி. 161 ரன்களும் 3 விக்கெட்டுகளும் எடுத்த ஷ்ரேயஸ் கோபால், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். கர்நாடகம் அணி முதல் இன்னிங்ஸில் 162.5 ஓவர்களில் 606 ரன்கள் குவித்ததால் எளிதான வெற்றி கிடைத்தது. உத்தரகண்ட் அணி இரு இன்னிங்ஸிலும் 116, 209 ரன்கள் எடுத்தது.

பெங்கால் - ம.பி. அணி...

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற காலிறுதியில் ஜார்கண்ட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்கால் அணி. ஜார்கண்ட் அணி இரு இன்னிங்ஸிலும் 173, 221 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 69/1 என எடுத்து வெற்றி பெற்றது. 6 விக்கெட்டுகள் எடுத்த ஆகாஷ் தீப், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். .ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் யாஷ் துபாய், ராஜாட் படிகர், அதிரடி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து