முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க. வேட்பாளருக்கான ஒப்புதல் படிவம் விநியோகம் : இன்று இரவுக்குள் ஒப்படைக்க அவைத் தலைவர் உத்தரவு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      தமிழகம்
Tamilmakan 2023 02 04

Source: provided

சென்னை : அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். இன்று இரவுக்குள் ஒப்புதல் படிவத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சேர்க்க அவர் உத்தரவிட்டுள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக தென்னரசு களமிறக்கப்பட்டார். அதே வேளை, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.

 கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 3 உறுப்பினர்கள் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுக்குழு முடிவினை தேர்தல் கமிஷனிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். 

இந்த இடைக்கால ஏற்பாடு, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை அளிக்கவில்லை என்பதையும், அவர்களின் உரிமை பறிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவத்தை கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அளிக்க படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்ட அறிக்கையில், 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு உறுபினர்கள் சுற்றறிக்கை மூலம் தேர்வு செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கையை முறையாக பூர்த்து செய்து இன்று இரவு 7 மணிக்குள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் என்னிடம் சேர்ந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து