முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரன் பேபி ரன் விமர்சனம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      சினிமா
RJ-Balaji 2023 02 06

Source: provided

ஆர்.ஜெ. பாலாஜி முதல் முறையாக கேலி கிண்டல், இல்லாமல் மிக சீரியஸாக நடித்துள்ள திரில்லர் படம் ரன் பேபி ரன். ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்ச்சர் தயாரித்துள்ளது. கதை, வங்கி ஒன்றில் பணியாற்றும் ஆர். ஜே பாலாஜியின் காரில், ஐஸ்வர்யா ராஜேஷ்  ஏறுகிறாள். இருவரும் வீட்டில் தனித்தனியாக தங்கி இருக்கும் போது ஐஸ்வர்யா பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பிணத்தை அப்புறப்படுத்த ஒரு பெட்டியில் அடைத்து செஞ்சியை நோக்கி பயணம் செய்கிறார் பாலாஜி. போலீஸ் கெடுபிடியால் பெட்டியை பயணம் செய்த வேனிலேயே வைத்து விட்டு செல்கிறார். வேன் டிரைவர் அந்த பிணத்தை கைப்பற்றி எரித்து விடுகிறார். போலீஸ் நெருங்கி வரும் போது டிரைவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது, கொலை செய்யபட்ட பெண் யார் என ஆராய்கிறார் பாலாஜி. பல திருப்பங்கள், ட்விஸ்ட் என நகர்கிறது படம். பர பரப்பான கிரைம் நாவல் படிப்பதை போன்ற உணர்வை தருகிறது படம். படத்தின் முதல் பாதி மிகுந்த பரபரப்புடன் நகர்கிறது. இரண்டாவது பாதியில் இது குறைவுதான். பிணத்தை பெட்டியில் வைத்து கொண்டு தவிக்கும் தவிப்பில் நன்றாக நடித்துள்ளார் பாலாஜி.. ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார். ஜோ மல்லூரி என்ற சிறந்த நடிகரை இப்படம் அடையாளம் காட்டி உள்ளது என்று சொல்லலாம்.  சாம் சி. எஸ் இசை பல காட்சிகளில் நம்மை பயமுறுத்துகிறது. யுவா வின் ஒளிப்பதிவும் மதனின் எடிட்டிங்கும் இணைந்து படத்தை ஒரு சிறந்த தரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து