முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் ரம்மியால் திருச்சியில் ஊழியர் ஒருவர் தற்கொலை

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Online-Rummy 2023 03 22

Source: provided

திருச்சி : திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில்  ரவிசங்கர் வசித்து வந்தார். இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்து விளையாடி அந்த விளையாட்டுக்கு அடிமையாகியும் உள்ளார். ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பெருமளவு பணத்தை இழந்துள்ளார்.

இதனால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி காலை அவரை எழுப்பிய போது எழவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உடனடியாக  ரவிசங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட ரவிசங்கரின் மனைவி அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ராஜலட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டதால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே ஆன்லைன் ரம்மியால் 41 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து