முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

166 கோடி ரூபாயில் மதுரை கோர்டுக்கு கூடுதல் கட்டிடங்கள் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடிக்கல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
CM-4 2023 03 25

Source: provided

மதுரை : ரூ.166 கோடியில் மதுரை கோர்டுக்கு கட்டப்படவுள்ள கூடுதல் கட்டிடங்களுங்கான அடிக்கல்லை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நேற்று நாட்டினார்.

மதுரை மாவட்ட கோர்ட்க்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்-செசன்சு கோர்ட் தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று காலை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மாவட்ட கோர்ட் வளாகத்திற்கு காரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். மேலும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் உள்ளிட்டோரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

இதையடுத்து விழா தொடங்கியது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட் மற்றும் செசன்சு கோர்ட்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து