முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி: தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்த ராகுல்காந்தி

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      இந்தியா
Rahul 2023 03 26

Source: provided

புதுடெல்லி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்துள்ளார். 

காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதில், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து உள்ளது. இந்த நிலையில் தனது டுவிட்டர் பயோ எனப்படும் சுய விவர குறிப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி மாற்றம் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து