எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார். இந்நிலையில் அவரிடம் தற்சமயத்தில் உலக அரங்கில் அசத்தும் டாப் 3 ஃபீல்டர்களை பெயரிடுமாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் தற்போதைய நிலையில் ஒரே சிறந்த ஃபீல்டராக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு., தற்போதைய நிலைமையில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். பொதுவாக ஐபிஎல் துவங்கும் போது தான் அனைவரும் பீல்டிங் துறையில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை. இப்போது அணியில் அனைவரும் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக இருக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கி வந்துள்ளோம். மேலும் பீல்டிங் துறையில் கவனம் செலுத்துவது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய துறையாகும் என கூறினார்.
டெல்லி அணியில் ரிஷப்க்கு பதிலாக அபிஷேக் போரல்
கடந்த டிசம்பரில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய டெல்லி அணியின் முக்கிய வீரரான ரிஷப் பண்ட் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவர் ஐபிஎல் 2023 சீசன் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பணிகளை யார் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அந்த இடத்தை அபிஷேக் போரல் நிரப்புகிறார். 25 வயதாகும் போரல், முதல் தர கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 26 இன்னிங்சில் 6 முறை அரைசதம் விளாசி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் காமடைந்திருக்கும் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு பதிலாக வங்காளத்தை சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் போரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ள அபிஷேக் போரல், அணியின் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அணியில் இடம்பிடித்திருக்கும் அண்கேப்ட் விக்கெட் கீப்பர்களான ஷெல்டன் ஜாக்சன், லுவ்னித் சிசோடியா, விவேக் சிங் ஆகியோருடன் அபிஷேல் போரலும் இணைந்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் மீது மார்க் பவுச்சர் நம்பிக்கை
முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் வருகிற 2-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கடைசி இடத்தை பெற்று விமர்சனத்திற்குள்ளான மும்பை அணி இந்த முறை எழுச்சி பெறும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது. இதையொட்டி மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில்:-
அணியில் சூர்யகுமார் யாதவ் நன்றாக இருக்கிறார். அவர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரிடம் பேசினேன். அப்போது அவர் 'நான் பந்தை நன்றாக அடித்து ஆடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நான், 'பதற்றமின்றி அமைதியாக இருங்கள்' என்று சொன்னேன். ஒரு வீரர் முதல் பந்தை தாண்டவில்லை என்பதற்காக அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லை என்று சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக அவர் 3 ஆட்டங்களிலும் முதல் பந்திலேயே வெளியேறி விட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் முதல் பந்தை சந்திக்கும் போது, ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் அவரை உற்சாகப்படுத்தும். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன் என்றார்.
சச்சினின் மகனுக்கு வாய்ப்பு: பயிற்சியாளர் பவுச்சர் பதில்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று மார்க் பவுச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது., காயத்தில் இருந்து அர்ஜூன் மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன். எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.
டோனிக்கு பதில் கேப்டன்சி: ஸ்மித் சொன்ன ருசிகர பதில்
2017 ஐபிஎல் தொடரில்தான் ஸ்டீவ் ஸ்மித் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்தபோது, ஒரு வீரராக டோனியை கேப்டன்சி செய்ய நேரிட்டது. குறிப்பாக அணி உரிமையாளர்கள் தன்னை கேப்டன்சி செய்ய வேண்டும் என்று கேட்ட போது தனக்கு பதற்றம் அதிகரித்தது என்றார் ஸ்டீவ் ஸ்மித். 2017 சீசனில் எம்.எஸ்.டோனிக்குப் பிறகு புனே அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டார். இதற்கு முந்தைய சீசனில் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14 ஆட்டங்களில் 5ல் மட்டுமே வெற்றி பெற்று 7ம் இடத்தில் முடிந்தது. பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அந்த சீசனில் ஸ்மித் சதம் அடித்த நிலையில், காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய ஸ்டீவ் ஸ்மித், கேப்டன்சியில் வளமான அனுபவம் பெற்ற எம்.எஸ்.டோனியிடமிருந்து பொறுப்பை ஏற்பது குறித்து ஆர்வமாக இருப்பதாகவும் டோனி தனக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் எவ்வாறு உதவினார் என்பதையும் எடுத்துரைத்தார் ஸ்மித். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஸ்மித் இது தொடர்பாகக் கூறிய போது, “நான் கேப்டனாக வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புவதாகக் கூற எனக்கு அழைப்பு வந்தபோது, கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால் அந்த சீசனில், எம்.எஸ்.டோனி அற்புதமாக இருந்தார். உங்களுக்குத் தெரியும், அவர் தன்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் உதவினார், அவர் ஒரு அரிதான மனிதர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.