முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜியோ சினிமாவில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழில் வர்ணனை செய்பவர்கள் விவரம்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2023      விளையாட்டு
IPL-2 2023 03 31

Source: provided

சென்னை : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த சீசனை டிஜிட்டல் வழியில் ஒளிபரப்பும் ஜியோ சினிமா தளத்தில் தமிழ் வர்ணனையாளர்கள் யார், யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

4K ரெசல்யூஷனில்... 

ஜியோ சினிமா தளத்தில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் போட்டிகள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. கடந்த 2022 ஜூன் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இப்போது ஜியோ டிவி அல்லது ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும்.

12 மொழிகளில்... 

தமிழ் உட்பட 12 மொழிகளில் ரசிகர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50 பிரேம் என்ற துல்லியத்தில், புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள் வியூ (360 டிகிரி கேமரா), வர்ணனையாளர்கள் உடன் சாட் செய்யும் வசதி போன்ற அம்சங்களுக்கும் இந்த முறை இருக்கும் என தகவல்.

தமிழ் வர்ணனையாளர்கள்: 

அபினவ் முகுந்த், ஆர். ஸ்ரீதர், வித்யூத் சிவராமகிருஷ்ணன், பாபா அபரஜித், பாபா இந்திரஜித், அனிருத் ஸ்ரீகாந்த், கே.பி அருண் கார்த்திக், சுதீர் ஸ்ரீநிவாசன், பகவதி பிரசாத், சஞ்சய் பால், ஸ்ரீநிவாசன் ராதாகிருஷ்ணன், சமீனா அன்வர், காயத்ரி சுரேஷ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து