முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் 11,000 ரன்கள்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      விளையாட்டு
Joe-Root 2023-06-03

Source: provided

லண்டன் : டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் 11,000 ரன்கள் குவித்து டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்  இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.
172 ரன்களில் ஆல் அவுட்...
இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 524 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
2-வது நாளில் 97 ரன்...
ஜேக் கிராவ்லி 56 (45) ரன்களும் பென் டன்கட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் 182 (178) ரன்களை விளாசினார். ஓலி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்ஸருடன் 205 (208) ரன்கள் விளாசினார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 (59) ரன்கள். அதைத்தொடர்ந்து 352 ரன்கள் பின் தங்கிய நிலமையில் களமிறங்கிய அயர்லாந்து 2-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 எடுத்திருந்தது.
புதிய சாதனை...
இப்போட்டியில் 56 ரன்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2-வது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் முறியடித்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
10 ஆயிரம் ரன்கள்...
இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 10,000 அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஏற்கனவே முறியடித்துள்ளார். அவருக்கு தற்போது 32 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (15921) அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை உடைக்க அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் 5 வீரர்கள்
1) அலஸ்டர் குக்  - 31 வருடம் 357 நாட்கள்.
2) ஜோ ரூட் 32 வருடம் 154 நாட்கள்.
3) டெண்டுல்கர் - 34 வருடம் 95 நாட்கள்.
4) ரிக்கி பாண்டிங் - 34 வருடம் 210 நாட்கள்.
5) ஜேக் காலிஸ் - 34 வருடம் 245 நாட்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து