முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவுவது ஏன்? வெளியுறவு அமைச்சர் விளக்கம்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      இந்தியா
Jaishankar 2023 06 08

Source: provided

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டிற்கான இந்தியாவின் கொள்கை என்பது அந்நாட்டு மக்களுக்கு உதவுவதுதான் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனையை விவரிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஜெய்சங்கரிடம், ஆப்கனுக்கான இந்தியாவின் கொள்கை மற்றும் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்குள்ள நமது தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பு கருதி நாம் திரும்ப அழைத்துக் கொண்டோம். பல்வேறு நாடுகளும் இதேபோல் அழைத்துக்கொண்டன.

அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில், நாம் காபூலில் உள்ள நமது தூதரகத்திற்கு தொழில்நுட்பக் குழுவை அனுப்பினோம். அந்தக் குழு தற்போது அங்கு உள்ளது. அவர்களின் முக்கியப் பணி, அங்குள்ள சூழலை கண்காணிப்பதும், எவ்வாறு நாம் ஆப்கன் மக்களுக்கு உதவ முடியும் என்பதை அறிவதும்தான். ஆப்கனிஸ்தான் விஷயத்தில் இந்தியாவின் நோக்கம் குறைவான அரசியல்; அதிகப்படியான உதவி என்பதுதான். ஆப்கன் மக்களுக்கான தேவை அதிகம். தடுப்பூசி பற்றாக்குறை, கோதுமை பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை போன்ற பற்றாக்குறைகளைப் போக்க இந்தியா உதவி இருக்கிறது. ஆப்கன் மக்களுக்கு நாம் உதவ வேண்டும் என நினைப்பதற்குக் காரணம் அந்நாடு, வரலாற்று ரீதியாக இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டது" என தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், "ஆப்கனிஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஆப்கனிஸ்தானின் 34 மாகாணங்களிலும் 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மின்சார உற்பத்தி, குடிநீர் விநியோகம், சாலை இணைப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்திருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து