எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என்றும், மக்கள் அதிக நீர் பருகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவியுள்ளது. நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் மத்திய கிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் பிப்பர்ஜாய் நேற்று காலை 8.30 மணியளவில் வட-வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கி.மீ தொலைவில் மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கி.மீ தொலைவில் போர்பந்தரில்(குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 830 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் நகரக்கூடும்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 10 முதல் 12 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். இதனால் பொதுமக்கள் அதிக நீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


