முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023-09-23

Source: provided

வாரணாசி : உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

விளையாட்டு பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக வாரணாசி தொகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இதற்காக உத்தர பிரதேச மாநில அரசு சார்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்து உள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 330 கோடியில் சர்வதேச தரத்துடன் பிரமாண்ட ஸ்டேடியத்தை நிறுவ உள்ளது. 

வாரணாசியின் ராஜதலா பகுதியில் உள்ள கஞ்சாரி கிராமத்தில் இந்த மைதானம் அமைகிறது. 30 மாதங்களில் இதை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும்.  

கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளது என்றும், திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப் பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து