முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு முகாம் நடத்த திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவு

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
Dengue 2023-09-28

Source: provided

தர்மபுரி: திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சுமித்ரா  தம்பதியினருக்கு பிரித்திகா(15), தாரணி(13), யோகலட்சுமி(7), அபிநிதி(4) மற்றும் ஒரு 8 மாத கைக்குழந்தை என 5 குழந்தைகள் உள்ளனர்.  

இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி மற்றும் 8 மாத கைக்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அபிநிதியும், 8 மாத கைக்குழந்தையும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி நேற்ற அதிகாலை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இந்த நிலையில் சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அந்த பகுதியில் டெங்கு பரவலை தடுக்க வீடு வீடாகச் சென்று கொசுப்புழு உற்பத்தி ஏற்படும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து