முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரகன் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      சினிமா
Suragan-Review 2023-12-05

Source: provided

தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், பாண்டியராஜன், ரேஷ்மா பசுப்புலேடி, வின்சென்ட் அசோகன், மன்சூர் அலிகான், வினோதினி, நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘சூரகன்’ இளம் போலீஸ் அதிகாரியான கார்த்திகேயனுக்கு, ஒரு விபத்தால் பார்வை குறைபாடு ஏற்பட்டு தலைகீழாக தெரிய ஆரம்பிக்கிறது. அதனால் வேலையின் போது தவறுதலாக குற்றவாளியை சுடாமல் சம்பந்தமில்லாத ஒரு அப்பாவி பெண்ணை சுட்டு விடுகிறார். இதனால் பணியில் இருந்து நீக்கப்பட்டு தன் அக்கா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சமயத்தில் ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு பெண் அடிபட்டு கிடப்பதை பார்த்து அவரை காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் இறந்து விடுகிறார்.. இறந்து போன பெண்ணின் செல்போன் அவர் கையில் கிடைக்க அந்தப் பெண் இறப்பதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முயலும் போது, பணக்காரரான நிழல்கள் ரவியின் பேத்தி என்பதை தெரிந்து கொள்கிறார். அந்த பெண்ணுடன் சேர்த்து மேலும் இரு பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை தெரிந்து கொள்கிறார். இவர்களை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்?அவர்களை கார்த்திகேயன் கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? மீண்டும் கார்த்திகேயன் பணியில் சேர்ந்தாரா? இல்லையா?என்பதே சூரகன் படத்தோட மீதி கதை. படத்தில் அனைவரும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து