முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா, ராகுலுடன் ரேவந்த் ரெட்டி சந்திப்பு : பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      இந்தியா
Sonia-Revanth-Reddy 2023-12

Source: provided

புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள தெலுங்கானா மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, அங்கு காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுலை சந்தித்து இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு  வருமாறு அழைப்பு விடுத்தார். 

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதற்கிடையே, டெல்லியில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராக இன்று 7-ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி நேற்று   டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவைச் சந்தித்தார். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து