முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் 'வாக்காளர் அதிகார யாத்திரை' ராகுலுடன் இணைந்தார் பிரியங்கா

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2025      இந்தியா      அரசியல்
Rahul 2025-08-26

பாட்னா, பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில், நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்தார்.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பீகாரில் 1,300 கிலோ மீட்டர் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், சுபால் பகுதியில் நேற்று நடைபெற்ற யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார். ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் பிரியங்கா காந்தி, ஒரு எஸ்யுவி காரின் கூரையில் அமர்ந்தபடி மக்களை சந்தித்தார்.

யாத்திரை ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு நேற்று (ஆகஸ்ட் 26) மீண்டும் தொடங்கியது. இதுவரை கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கர், கதிஹார் மற்றும் பூர்னியா மாவட்டங்களை இந்த யாத்திரை கடந்துள்ளது. மேலும், இது மதுபனி, தர்பங்கா, சீதாமர்ஹி, மேற்கு சம்பாரண், சரண், போஜ்பூர் மற்றும் பாட்னா மாவட்டங்கள் வழியாக பயணிக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து