முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

370-வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி :  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க. அரசால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று (டிச.11 திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

நாடு விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு இரட்டை குடியுரிமை, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது பிரிவும் உருவாக்கப்பட்டது. 

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய பா.ஜ.க. அரசால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. மேலும் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் முற்றாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பா.ஜ.க. அரசு நீக்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்தனர்.  ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த வழக்குகளைத் தொடர்ந்தனர். 370-வது பிரிவு ரத்துக்கு எதிராகவும் ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இந்த வழக்குகள் தொடரப்பட்டன. 

அவற்றை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு தனது விசாரணையை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தொடர்ந்து 16 நாட்கள் இந்த விசாரணை நடைபெற்றது.  இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு ஒத்தி  வைக்கப்படுவதாக கடந்த செப்டம்பர் -5 -ம் தேதி அறிவித்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து