முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் பேச முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது: பிரதமர்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
Modi 2023-02-27

Source: provided

நெல்லை : தமிழில் பேச முடியவில்லையே என ஏக்கமாக உள்ளதாக நெல்லை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நெல்லை பாளையங்கோட்டையில் நடைற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகையில் இருந்தும் சமைக்கும் துன்பத்திலிருந்தும் பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நமது தாய்மார்கள் சகோதரிகள் வாழ்க்கையில் மிகப் பெரிய நன்மை கிடைத்துள்ளது. அதனால்தான் நான் செல்கிற பக்கம் எல்லாம் இத்தனை தாய்மார்கள், பெண்கள் திரளாக வந்து எனக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.

தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது. அவ்வபோது ஒரு சில வார்த்தைகள் பேசுகிறேன். ஆனாலும் முழுமையாக தமிழ் பேச முடியவில்லை. என் பேச்சு உங்களுக்கு புரியும் படி பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆயிரம் பேர் என் முன் இருக்கிறீர்கள் எனது ஒவ்வொரு சொல்லும் புரியாவிட்டாலும் எனது மனதை புரிந்து கொண்டு நீங்கள் எதிரில் இருக்கிறீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது இரண்டு கையையும் எடுத்து கும்பிடுகிறேன், தலை வணங்குகிறேன். நீங்கள் என்னை வாழ்த்துங்கள்" எனப் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து