முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் பெங்களூருவில் ரூ.1 கோடி பறிமுதல்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      இந்தியா
Bengaluru 2024-04-13

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரூ தெற்கு தொகுதிக்குட்பட்ட ஜெயநகர் பகுதியில் கட்டு கட்டாக ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை இரு சக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்திற்கு மாற்றும்போது, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. தரப்பில் தேஜஸ்வி சூர்யா மற்றும் காங்கிரஸ் தரப்பில் கர்நாடக மந்திரியின் மகள் சவுமியா போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து