முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கெஜ்ரிவால் மனைவி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      இந்தியா
Kachirval-Sunitha 2024-03-27

Source: provided

புதுடெல்லி : குஜராத் மாநிலத்துக்கான ஆம் ஆத்மி நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் பெயர் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதத்தை படித்து சமூக வலைதளங்களில் விடியோக்களை வெளியிட்டு வரும் அவரது மனைவி சுனிதா நேரடி அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்துக்கான ஆம் ஆத்மி நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் சுனிதாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும், சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா பெயரும், ஜாமீனில் வெளிவந்துள்ள சஞ்சய் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்பட 40 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. தில்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து