Idhayam Matrimony

குஜராத்தை வீழ்த்தியது டெல்லி

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      விளையாட்டு
Pragnananda 2023-08-23

Source: provided

அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.  

32-வது லீக் ஆட்டம்...

17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது.  விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணியில் டேவிட் வார்னர் ஆடவில்லை.  ‘டாஸ்’ வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

ரஷித் கான் 31 ரன்... 

அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.  குஜராத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக சாஹா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர்.  சாஹா 10 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். தமிழக வீரர் சாய் சுதர்சன் 12 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் 2 ரன்னிலும், அபினவ் மனோகர் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். ராகுல் தெவாதியா 10 ரன்களும் துணை கேப்டன் ரஷித் கான் 24 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

89 ரன்கள் மட்டுமே...

இறுதியாக 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் மட்டுமே எடுத்தது.  டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ்குமார் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.

ரிஷப் ஆட்டநாயகன்..

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில், அதிகபட்சமாக ஜாக் பிரேசர் மெக்குர்க் 20 ரன்னும், ஷாய் ஹோப் 19 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 16 ரன்னும் எடுத்தனர்.  விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.  3-வது வெற்றியை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் 9-ல் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து