எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செவ்வாய்கிழமை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், தர்மபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 41.2 டிகிரி செல்சியஸ், திருத்தணி & திருப்பத்தூரில் 40.8 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 40.7 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் (நகரம்) 40.2 டிகிரி செல்சியஸ், கோயம்புத்தூர் (விமான நிலையம்) மற்றும் நாமக்கல்லில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி – 39 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23 டிகிரி –30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: குமரிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
23.04.2024 முதல் 25.04.2024 வரை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26.04.2024 முதல் 29.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 27.04.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
அதிகபட்ச வெப்பநிலை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி–41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி–38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: 23.04.2024 முதல் 27.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


