முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      இந்தியா
Chiranjeevi 2024-04-30

Source: provided

ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணியில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பவன் கல்யாண் தனது தொகுதியில் 2 கட்டங்களாக தேர்தல் பிரச்சாரத்தை முடித்து மற்ற இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவரது தம்பி பவன் கல்யாணுக்காக பிதாபுரம் தொகுதியில் வருகிற 5-ம் தேதி முதல் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து