முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி

சனிக்கிழமை, 4 மே 2024      இந்தியா
Umar-Abdullah 2023-10-27

Source: provided

ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார். 

காஷ்மீரில் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் ஜம்முவில் உள்ள 2 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. போட்டியிடுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. 

இந்த நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்ததாக பா.ஜ.க. கூறி வருகிறது. இவ்வளவு பெரிய சேவையை செய்திருந்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து