முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு

சனிக்கிழமை, 4 மே 2024      இந்தியா
EP 2023-09-25

Source: provided

திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது. 

நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. கேரள மாநிலத்திலும் அதிக வெப்பம் காணப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மண்டல வாரியாக மின் கட்டுப்பாடு நடவடிக்கையை கேரள மாநில மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. 

அதன்படி மின் நுகர்வு அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள், இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

வணிக நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு பிறகு அலங்கார விளக்குகள் மற்றும் விளம்பர பலகைகளை அணைக்க வேண்டும். வீட்டு உபயோகிப்பாளர்கள் 26 டிகிரிக்கு மேல் ஏ.சி.களை அமைக்க வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. 

முதல் கட்டமாக பாலக்காடு மின்வட்டத்திற்குபட்ட பகுதிகளில் இரவு 7 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை மின்சாரம் ஒழுங்குபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பாதிரிப்பாலா, ஓட்டப்பாலம், ஷோரனூர், செர்புளச்சேரி துணை மின் நிலையங்களில் மின் விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நேரத்தில் மின் நுகர்வுகளை முடிந்தவரை தவிர்த்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து